EXCLUSIVE FOR
PIRAMALAI KALLAR

  எங்களை பற்றி சிறு அறிமுகம்

அன்பிற்கினிய உறவுகளே வணக்கம்,

PK மேட்ரிமோனி பிரமலைக் கள்ளர் இனத்தின் மக்களுக்காக பிரத்தியோகமாக உள்ள ஒரு திருமண தகவல் மையம் ஆகும்.

சென்னை வாழ் பிரமலைக்கள்ளர் நலவாழ்வு சங்கம் மற்றும் PKM கல்வி அறக்கட்டளை இணைந்து இந்த திருமணத்தகவல் மையத்தை நடத்துகின்றனர். இந்த சங்கத்தினர் மகளிர் குழு, வேலை வாய்ப்பு தகவல் மையம் போன்ற இதர சேவைகளையும் சேர்த்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நமது சங்கம் சர்பாக சோழவரம் அருகே 5730 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான நிலம் வாங்கியுள்ளோம் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

நமது சங்க நிர்வாகிகள்

V. செல்வம்
தலைவர்
அரிமா ஈகை
V.P. மலைச்சாமி M.Com.,
செயலாளர்
திருவான்மியூர்
S. ஜெயராம் M.Com.,
பொருளாளர்
பள்ளிக்கரணை

P.K.M. அறக்கட்டளை நிர்வாகிகள்

V. செல்வம்
தலைவர்
அரிமா ஈகை
R. பாண்டியராஜன் M.E.,
செயலாளர்
AVM.பாலசுப்பிரமணியன் B.A.,
பொருளாளர்



சங்கத்தின் நோக்கங்கள்
  1. சென்னை வாழ் பிறமலைக்கள்ளர் அனைவரையும் ஒன்று படுத்துதல்.
  2. நமது சமூகத்தினர் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு உறவுகளை மேம்படுத்துதல்.
  3. நமது சமுதாயத்தினர் தொழில் மற்றும், அலுவலக ரீதியாக ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு உறவினர் உணர்வோடு உதவிகளை பகிர்ந்து கொள்ளுதல்.
  4. சென்னை வாழ் பிரமலைக்கள்ளர்களின் நியாயமான கோரிக்கைகளை சங்கம் மூலமாக நிறைவேற்ற வகை செய்தல்.
  5. நமது சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் முன்னேற்றதிருகு உதவுவது.
  6. நமது சங்கம் முற்றிலும் அரசியல் சார்பற்றதாக செயல்படுவது.
  7. நமது சங்க உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ குடும்பத்துடன் ஒன்று கூடி, உறவுகளை மேம்படுத்திக்கொள்ளுதல்.
  8. நமது இனத்திற்காக அறக்கட்டளை ஒன்றை நிறுவி அதன் மூலம் சங்க அலுவலகம் கட்டுவது, மேலும் வேலை வாய்ப்பு கல்விக்கு உதவுவது.
  9. நமது சமுதாயத்தினர் அனைவரையும் உறுப்பினராக்கி முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தல்.
  10. நமது சமுதாய தலைவர்களை சங்கத்தின் மூலம் அணுகி நமது சமுதாயத்திற்கான நன்மைகளை பெறுதல்.
  11. நமது சமுதாயத்தில் உயர் படிப்பான I.A.S., I.P.S., மற்றும் Computer பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் அமைத்தல்.
  12. கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு பரிசும் மற்றும் சான்றிதழும் வழங்கி ஊக்கப்படுத்துதல்.
  13. நமது சமுதாய கலைகர்களின் உதவியோடு நல்ல காலை நிகழ்ச்சிகள் நடத்தியும், நன்கொடை வசூலித்து நமது சங்க பொருளாதாரத்தி மேம்படுத்துதல்.

மன பேதம் இருக்கலாம்
இன பேதம் கூடாது
சிந்திப்போம்
ஒன்றுபடுவோம்